"உலகம் அனுபவித்த பைத்தியகாரத்தனத்திலேயே முதன்மையானது நாட்டுப்பற்று. கடந்த சில மாதங்களில் நான் ஐரோப்பா முழுவதும் சென்றிருந்தேன். எல்லா இடங்களிலும் நாட்டுப்பற்று அளவுக்கு மீறி இருக்கிறது. அதன் விளைவாக இன்னொரு யுத்தம் வரப்போகிறது"

இந்த விமர்சனத்திற்கு சொந்தக்காரர் உலகம் முழுதும் மிகவும் பிரபலமானவர், அந்த பிரபலத்தின் வெளிப்படையான இந்த விமர்சனம் பலரை கோபத்துக்குள்ளக்கியது (பிரபலம்னாலே ப்ராப்ளம் தானே!) என்பது உண்மை தான் என்றாலும், அடுத்த எட்டாண்டுகளில் உலகம் அது வரை சந்தித்திராத பெரிய போரை சந்தித்தது. அது தான் இரண்டாம் உலக போர்.

யோசித்து பார்த்தால் அணு ஆயுதத்தால் பல லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கிய அந்த இரண்டாம் உலக போருக்கு... எந்த போருக்கும் நாட்டுப்பற்று தான் காரணம். ஒரு போர் ஆரம்பமாவதற்கு நாட்டுப்பற்று தான் காரணம், அது முடிவுக்கு வருவதற்கும் நாட்டுப்பற்று தான் காரணம். இது நம் நாடு என்று எண்ணுகின்ற நாட்டுப்பற்று இது நம் உலகம் என்ற உலகப்பற்று ஏன் வரமாட்டேன் என்கிறது? ஒரு வேலை அந்த உலகப்பற்று தான் உலகத்தை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கும் எண்ணத்திற்கு காரணமோ!?

மேலே உள்ள அந்த விமர்சனம் பேம் பிரெளன் எழுதிய (தமிழில் நாணு) அந்த பெரிய பிரபலத்தின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து இங்கு தந்துள்ளேன். அந்த பிரபலம் யார் என்று யாராவது யூகிக்க முடிகிறதா? இதோ அவருடைய புகைப்படம் கீழே...

3 comments:

எனக்கும் நாட்டுப்பற்று என்பதில் நம்பிக்கை இல்லை. முதலில், நம் குடும்பம், பிறகு நம் ஜாதி, பிறகு நம் கல்லூரி, அலுவலகம், பிறகு நம் மாநிலம், பிறகு நம் நாடு என்று பற்று வளர்ந்துக்கொண்டே போகும். இதில் எங்கு வேண்டுமானாலும் சண்டைகள் தோன்றக்கூடும். இதை அழிப்பதற்கு நாம் முதலில் அடையாளங்களை விட்டொழிக்க வேண்டும். தலையில் டர்பன் கட்டுவது, நெற்றியில் விபூதி போடுவது, நாமம் போடுவது, தாடி, குல்லாய் போடுவது, ஆரஞ்சு நிறத்தில் சட்டை அணிவது.. இதெல்லாம் எதற்கு?

யாருங்க அது?
நாட்டுப்பற்று,மாநிலப் பற்று, மாவட்டப் பற்று, ஊர்ப்பற்று,ஜாதிப்பற்று,மதப்பற்று இப்படி எல்லாப் பற்று மேலேயும் பற்றில்லாம இருக்கணும் :-):-):-)

இது பெரிய அளவில்
ஆய்வுக்கு உட்படுத்தப்
பட வேண்டிய கருத்து!!

தம்பிக்கு எந்த ஊரு?

வரலாறு முக்கியம்